ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (22:53 IST)

போயஸ் கார்டனுக்கு விவேக் அவசர வருகை! உள்ளே நுழைய அனுமதி கிடைக்குமா?

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்திற்குள் சற்று முன்னர் வருமான வரித்துறையினர் அதிரடியாக நுழைந்து சோதனை செய்து வருகின்றனர். இது எங்க லிஸ்ட்டிலேயே இல்லை என்பது போல் ஆளும் அரசும், தினகரன் குரூப்பும் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


 


இந்த நிலையில் போயஸ் கார்டனில் சோதனை செய்யப்படுவதாக செய்தி கிடைத்த உடனே ஜெயா டிவி எம்டி விவேக் அவசரமாக போயஸ் கார்டனுக்கு வருகை தந்துள்ளார். ஆனால் அவருக்கு உள்ளே நுழைய அனுமதி கிடைக்குமா? என்று தெரியவில்லை

போயஸ்கார்டன் ஜெயலலிதா வீட்டிற்குள் மூன்று அதிகாரிகள் சோதனை செய்து வருவதாகவும், அவர்கள் சோதனை செய்து முடிக்கும் வரை யாருக்கும் உள்ளே நுழைய அனுமதி இல்லை என்று கூறப்படுவதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் விவேக் உள்ளே செல்வாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.