வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (22:42 IST)

பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை: போயஸ் கார்டன் ரெய்டு குறித்து ஐடி அதிகாரிகள் விளக்கம்

இன்று மாலை சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைதண்டனை உறுதி செய்யப்பட்ட நிலையில் அடுத்த அதிரடியாக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்குள் வருமான வரித்துறையினர் நுழைந்தனர்.


 


இதனால் போயஸ் கார்டன் பகுதியில் பதட்டம் நிறைந்திருப்பதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் போயஸ் கார்டனின் ஜெயலலிதா இல்லத்தில் அவரிடம் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அறையில் மட்டுமே சோதனை செய்யப்படுவதாகவும், மற்ற இடங்களில் அதிகாரிகள் கைவைக்க மாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது

ஏற்கனவே கடந்த வாரம் பூங்குன்றன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்த நிலையில் அங்கு கிடைத்த ஒருசில ஆவணங்களின் அடிப்படையில் போயஸ் கார்டனில் உள்ள பூங்குன்றன் அறையில் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.