செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 17 நவம்பர் 2017 (22:27 IST)

வருமான வரித்துறையின் அடுத்த அதிரடி: போயஸ் கார்டனுக்கு நுழைகிறது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் தமிழகத்தில் மத்திய அரசின் ஆதிக்கம் அதிகம் உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு மத்திய அரசுக்கு தொடர்ந்து ஜால்ரா போட்டு வருவதையும், மத்திய அரசின் ஒருசில கொள்கைகளை எதிர்க்காமல் இருப்பதையும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி வருகிறது.


 


இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமானவரித்துறை அலுவலகம் தமிழகத்தில் புகுந்து விளையாடுகிறது. கடந்த வாரம் சசிகலா உறவினர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியதை உதாரணமாக கூறலாம்

இந்த நிலையில் கனவிலும் எதிர்பார்க்காதவாறு வருமானவரித்துறையினர் போயஸ்தோட்டத்தின் ஜெயலலிதாவின் இல்லத்திற்குள் சென்று சோதனை போட நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் போயஸ் கார்டனுக்குள் வருமானவரித்துறையினர் நுழையும் செய்தி வெளிவரலாம் என்று கருதப்படுகிறது.