நடிகர் விஷால் கைது செய்யப்படுவாரா?? பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிமன்றம்
நடிகர் விஷாலுக்கு வருமான வரித்துறை தொடுத்துள்ள வழக்கில் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
பிரபல நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். இந்நிலையில் விஷால் தனது நிறுவன ஊழியர்களிடம் வாங்கிய வரித் தொகையை வருமான வரித்துறைக்கு செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்தது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றம் பல முறை சம்மன் அனுப்பியும் உள்ளது.
ஆனால் விஷால் நீதிமன்றம் முன்பு ஆஜராகாமல் இருந்துள்ளார். இதனால் சென்னை எழும்பூர் நீதிமன்றம் ஜாமினில் வெளிவரமுடியாத அளவிற்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இதனால் விஷால் எப்போது வேணாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.