1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. vishal speech about jallikkattu issue

கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை: விஷால்

விஷால்
ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் இது குறித்து கருத்து தெரிவிக்க விருப்பம் இல்லை என்று நடிகர் விஷால் கூறினார்.


 


தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால் சென்னையில் விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசியதாகவும், ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது வரவேற்கத்தக்கது என்று கூறியதாகவும் செய்திகள் வெளியாகின. இதனையடுத்து நடிகர் விஷாலுக்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு நடிகர் விஷால் பேட்டி அளித்தார். அப்போது அவ்ர் கூறியபோது, இவ்விவகாரம் தொடர்பாக விளக்கம் தருவதே வருத்தமாக உள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. முதலில் நான் பேசியது தொடர்பான வீடியோவை முழுமையாக பாருங்கள்.  நான் சொன்னது சித்தரிக்கப்பட்டு வெளியாகியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கவே வருத்தமாக இருக்கிறது. அந்த வீடியோவை முழுமையாக பார்த்தவர்கள் போராட்டம் நடத்த மாட்டார்கள் என்றார்.
அடுத்த கட்டுரையில்
தலைமை செயலாளர் பதவி: ஞானதேசிகன் வெளியே - ராம்மோகன் உள்ளே