செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 4 டிசம்பர் 2017 (19:46 IST)

கமல், ரஜினியை நம்பி பிரயோஜனமில்லை: விஷால் அதிரடி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் விஷாலை கமல் தான் பின்னிருந்து இயக்குகிறார் என்று கூறப்படும் நிலையில் உண்மையில் இந்த முடிவை விஷால் தனித்தே எடுத்ததாக கூறப்படுகிறது.

கமல் அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக பாவ்லா காட்டி கொண்டிருந்தாலும் அவருக்கு உண்மையில் அரசியல் கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இருப்பதாக தெரியவில்லை. விஸ்வரூபம் 2, சபாஷ்நாயுடு, ஆகிய படங்களை முடிக்கவே அவருக்கு இன்னும் ஆறு மாதங்கள் தேவைப்படும். அதன் பின்னர் 'இந்தியன் 2' படத்தில் கமிட் ஆகிவிட்டார் என்றால் ஷங்கர் ஒரு இரண்டு வருடத்தை இழுத்துவிடுவார். எனவே கமல் வெறும் பரபரப்புக்காக அரசியலை பேசி வருகிறார் என்பது விவரம் அறிந்தவர்களுக்கு தெரியும்.

இதை சரியாக கேட்ச் செய்துவிட்ட விஷால் இனி ரஜினியையும், கமலையும் நம்பி பிரயோஜனமில்லை என்று நேரடியாக களத்தில் இறங்கிவிட்டார். விஷாலின் அதிரடியை ரஜினி, கமல் இரண்டு பேருமே எதிர்பார்க்கவில்லை. இந்த நிலையில் ஆர்.கே.நகரில் விஷால் ஒருவேளை வெற்றி பெற்றுவிட்டால் திரையுலகிலும் பெரிய திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.