செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2017 (18:06 IST)

விஷால் வேட்புமனு நிராகரிப்பு: கூட்டு சேர்ந்த திமுக-அதிமுக

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நேற்று நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். விஷாலின் வேட்புமனுவை திமுக மற்றும் அதிமுக உள்பட அனைத்து அரசியல் கட்சிகளும் அதிர்ச்சியுடன் கவனித்து வந்தன

இந்த நிலையில் இன்று வேட்புமனுக்கள் பரிசீலனை நடந்தபோது நடிகர் விஷாலின் வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதிமுக மற்றும் திமுக தங்கள் வேற்றுமைகளை மறந்து ஒன்றாக இணைந்து தேர்தல் அதிகாரியை வலியுறுத்தினர்.  இதனால் ஏற்பட்ட பரபரப்பு காரணமாக விஷாலின் வேட்புமனுவை கடைசியில் பரிசீலனை செய்வதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்

இந்த நிலையில் சற்றுமுன் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். விஷாலின்  வேட்புமனுவை முன்மொழிந்த இருவரின் பெயர்கள் தவறாகவும் முகவரி போலியாக இருப்பதாலும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றம் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.