செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2017 (15:17 IST)

விஷாலுக்கு திடீர் நெருக்கடி கொடுத்த ஞானவேல்ராஜா

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக இருந்து கொண்டே ஆர்.கே.நகர் தேர்தலிலும் விஷால் போட்டியிட்டால் அரசின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும், இதனால் பல தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே விஷால் தனது தயாரிப்பாளர் சங்க பதவியை ராஜினாமா செய்துவிட்டு எந்த தேர்தலில் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் என்றும் இயக்குனர் சேரன் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார். ஆனால் சேரனின் கோரிக்கையை ஏற்க விஷால் மறுத்துவிட்டார்.
 
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர்களில் ஒருவரான ஞானவேல்ராஜா திடீரென சற்றுமுன்னர் தனது செயலாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன்னுடைய ராஜினாமாவிற்கு அவர் கூறும் காரணம், சென்னை-செங்கல்பட்டு விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் தார்மீக அடிப்படையில் தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
 
ஞானவேல்ராஜாவின் இந்த அறிவிப்பு விஷாலுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஞானவேல்ராஜா போலவே விஷாலும் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் தற்போது மேலும் ஓங்கி வலுத்து வருகிறது.