திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 டிசம்பர் 2017 (10:25 IST)

ஆர்.கே.நகர் ஓவர் ; அடுத்து கன்னியாகுமரி மீனவர்கள் - விஷால் அறிவிப்பு

ஆர்.கே.நகர் தேர்தல் விவகாரத்தை மறந்துவிட்டு கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தப்போவதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.


 
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஷாலின் வேட்பு மனு பல களோபரங்கள்  மற்றும் திருப்பங்களுக்கு பின் நிராரிக்கப்பட்டது. அவரை முன்மொழிந்த இருவர் வேட்பு மனுவில் இருப்பது தங்களின் கையெழுத்து இல்லை எனக்கூறியதால் அவரின் மனு நிராகரிக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில், விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் எனது சுய விருப்பத்தின் பேரிலேயே ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிட முடிவெடுத்தேன். எனக்கு பின்னால் எந்த அரசியல் கட்சியோ அல்லது நபரோ இல்லை.
 
தற்போது ஆர்.கே.நகரை விட பெரிய பிரச்சனையை கன்னியாகுமரி மீனவர்கள் சந்தித்துவருகின்றனர். அவர்களுக்கு நம் ஆதரவு வேண்டும். எனவே, அதில் கவனம் செலுத்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.