1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஆகஸ்ட் 2024 (12:09 IST)

இனி விசா இலவசம்.. ஈஸியா இலங்கை போகலாம்? - இலங்கை அரசு கொடுத்த அறிவிப்பு!

Srilanka

இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளுக்கு இலவச விசா அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

 

 

இந்தியாவின் அண்டை தீவு நாடான இலங்கை தனது பொருளாதாரத்தின் பெரும்பகுதியை சுற்றுலாவை நம்பியே இருந்து வருகிறது. கொரோனாவுக்கு பிறகு சுற்றுலா குறைந்ததால் இலங்கை தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. இதனால் அவ்வபோது குறிப்பிட்ட காலத்திற்கு இலவச விசாக்களை அறிவித்து பயணிகளை ஈர்க்க இலங்கை முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தற்போது எதிர்வரும் அக்டோபர் 1 முதல் இந்தியா உள்ளிட்ட 35 நாடுகளை சேர்ந்த பயணிகள் இலங்கை வர இலவச விசா அறிவிப்பை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. ஆண்டுக்கு 50 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் இந்த இலவச விசா திட்டம் அக்டோபரில் அமலுக்கு வருகிறது.

 

முன்னதாக மே மாதத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க குறிப்பிட்ட சில காலக்கட்டத்திற்கு மட்டும் இலங்கை இலவச விசா அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K