வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2024 (10:02 IST)

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் கப்பல் சேவை: கட்டணம் எவ்வளவு?

Ship
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த கப்பலில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.5000 எனவும், பிரீமியம் வகுப்பில் பயணிக்க ரூ.7500 எனவும் பயண டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதல் பயணம் இன்று காலை 9 மணிக்கு தொடங்க உள்ளது!
 
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன் துறைமுகத்திற்கு கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த மே 13ஆம் தேதி தொடங்கப்படும் என தேதி மாற்றப்பட்டது.
 
ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த  கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் நாகை - காங்கேசன் இடையே கப்பல் சேவை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
 
இந்த நிலையில்  நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு இன்று முதல் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran