வெள்ளி, 15 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (19:45 IST)

கோயில் நிர்வாகம் அரசின் கட்டைவிரலின் கீழ் இருக்க வேண்டுமா? நீதிபதி கேள்வி

கோவில் நிர்வாகம் தொடர்ந்து அரசின் கட்டைவிரலில் தான் இருக்க வேண்டுமா என நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
ஸ்ரீரங்கம் பகுதியில் வசிக்கும் அரங்கராஜன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் இணை ஆணையர் செயல் அலுவலர் மீது புகார் கொடுத்ததாகவும் ஆனால் அந்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீரங்கம் போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் கூறியிருந்தார்.
 
ஆகவே என் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறினார் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் தமிழகம் கோயில்களின் நகரம் கோவில். நமது கலாச்சாரத்தின் முக்கிய பங்கு. பழமையான கோவில்களை பராமரிப்பது வழங்கப்பட்ட நிலங்கள் தனியார் அழிக்கப்படுகின்றன. கோவில்களை யார் நிர்வகிப்பது என்பது ஒரு அடிப்படைப் பிரச்சினையாக உள்ளது
 
கோவில்கள் தொடர்ந்து அரசின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டுமா? தேவாலயங்கள் மசூதிகள் மீது அரசு கடைப்பிடிக்கும் அதே நிலைப்பாட்டை கோவில்கள் மீதும் கடைபிடிக்க வேண்டும் என்று வாதிடுவது நியாயம்தான் என்று கூறியுள்ளார்