பட்டாசு ஆலைகளில் இரவு நேர பணி! – மாவட்ட ஆட்சியர் விடுத்த எச்சரிக்கை!
விருதுநகரில் இரவு நேர பணிகளில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட ஆட்சியர் புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அடுத்த சில மாதங்களில் தீபாவளி உள்ளிட்ட பல பண்டிகைகள் நடைபெற உள்ள நிலையில் விருதுநகரில் பட்டாசு உற்பத்தி தீவிரமடைய தொடங்கியுள்ளது. குட்டி ஜப்பான் எனப்படும் சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதேசமயம் பட்டாசு ஆலைகளில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்கான நெறிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சில பட்டாசு ஆலைகளில் இரவு நேரங்களிலும் பணி நடப்பதாக தெரிகிறது. இரவு நேரங்களில் தூக்க கலக்கத்தில் சிறிது தவறு நடந்தாலும் விபத்து நடக்க வாய்ப்பு இருப்பதால் இரவு நேர பணிகள் கூடாது என விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதை மீறி இரவு நேர பட்டாசு தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டால் ஆலையின் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.