செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 25 ஜூன் 2022 (19:51 IST)

மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்- மாவட்ட ஆட்சியர்

Face Mask
கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியது. முன்னதாக ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த பாதிப்புகள் தற்போது அதிகரித்து வருகிறது.

இந்தியாவில்  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 15,940 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,33,78,134ஆக உயர்ந்தது. புதிதாக 20 பேர் இறந்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில்  நேற்று நிலவரப்படி சுமர் 1359  பேர் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொடர்ந்து, கொரொனா தொற்றுப் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதைத் தடுக்கும்  நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் பொது இடங்களில் மாஸ்க் அணியாமல் வெளியில் சென்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.