1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vinayagar Chathurthi event Special Buses to run from today

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை - சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Vinayagar Chathurthi
விநாயகர் சதுர்த்தியோடு தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
 
விநாயகர் சதுர்த்தி வருகிற 10 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருவதால் அதை தொடர்ந்து  சனி, ஞாயிறு என 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இதனால் பேருந்தில் பயணிக்கும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 
 
அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,250 பேருந்துகளோடு 1,000 சிறப்பு பஸ்களை கூடுதலாக இயக்கப்பட உள்ளது. இன்று 100, நாளை 300, 9 ஆம் தேதி 600 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதேபோல விடுமுறை முடிந்து மக்கள் சென்னைக்கு திரும்பி வர வசதியாகவும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கட்டுரையில்
தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை!!