1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vilupuram records highest rain fall in Tamil Nadu

தமிழகத்தில் அதிகபட்ச மழை பொழிவு எங்கு தெரியுமா?

தமிழகம்
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தக்கரையில் மழை பதிவாகியுள்ளதாக தகவல். 
 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் அதிகமான மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
 
இந்நிலையில் தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம், ஊத்தக்கரையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து மண்டபம், ராமேஸ்வரத்தில் தலா 7 செ.மீ.,  மோகனூர், முசிறி, கிருஷ்ணராயபுரத்தில் தலா 6 செ.மீ. மழை பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 
அடுத்த கட்டுரையில்
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் … போக்சோ சட்டத்தில் கைது!