வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (08:24 IST)

நாளை 20,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள்

ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 20,000 கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.  
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 3 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை தோறும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நாளையும் மெகா தடுப்பூசி முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
 
இது குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் தற்போது கையிருப்பில் 24,98,365 தடுப்பூசிகள் இருக்கிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் கொரோனா தடுப்பூசி முகாம்கள்  நடைபெறுகிறது.  மூன்று மருத்துவ முகாம்களைப் போலவே இந்த நான்காவது மருத்துவ முகாமும் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணிவரை நடைபெற உள்ளது. 
 
அக்டோபர் மாதத்தில் 1 கோடியே 50 லட்சம் தடுப்பூசிகள் செலுத்துவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.