வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 2 அக்டோபர் 2021 (08:02 IST)

காந்தி பிறந்தாள்: அரசியல் தலைவர்கள் மரியாதை

தேசத்தந்தை என்று அழைக்கப்படும் காந்திக்கு இன்று 153 ஆம் பிறந்த நாள். இதனால் அரசியல் தலைவர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். 
 
ஆம், ராஜ்காட்டில் காந்தி ஜெயந்தியில் மகாத்மா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். 
 
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மகாத்மா காந்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
சென்னையில் காந்தி சிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்களும் உடன் இருந்தனர்.