திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (11:26 IST)

விழுப்புரம் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: பெரும் பரபரப்பு

விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில வருடங்களாக காவல்துறையில் உள்ளவர்கள் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அவ்வபோது நடந்து வருகிறது. இந்த நிலையில் விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை என்பவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்
 
விழுப்புரம் காக்குப்பம் ஆயுதப்படை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் காவலர் ஏழுமலை தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினர்களும் காவல்துறை அதிகாரிகளும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
விழுப்புரம் ஆயுதப்படை 2 ஆம் நிலை காவலர் ஏழுமலை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சமப்வம் குறித்த செய்தி அறிந்தவுடன் விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார். இந்த தற்கொலையால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது