65 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடந்த நிகழ்வு !
உலகில் பணக்காரக் கடவுள் என்று திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பெருமை உண்டு. இந்நிலையில் 65 ஆண்டுகளுக்கு பிறகு ஏழுமலையான் கோவில் பக்தர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரொனா தொற்றினால் அனைத்து நாடுகளும் பெரும் பாதிப்புகளையும் உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் பதினோரு லட்சம் மக்கள் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் 31 ஆம் தேதி தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில், திருப்பது தேவஸ்தான தலைமை ஜீயருக்கு அட்சகர்களுக்கும் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளதால், கோயிலில் பக்தர்கள் வருகை குறைதுள்ளது.ஜூன் 11 ஆம் தேதி முதல் இதுவரை 20 கோடி ரூபாய் மட்டுமே காணிக்கை கிடைத்துள்ளாத தகவல் தெரிவித்துள்ளது தேவஸ்தானம். மேலும் கடந்த நான்கு மாதஙகளில் ரூ.1100 கோடி வருமானம் கிடைத்திருக்க வேண்டிய நிலையில் தற்போது ரூ. 270 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.