ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (12:46 IST)

விழுப்புரம் மாவட்டப் பொறுப்பாளர்கள் திடீர் மாற்றம்: திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு..!

விழுப்புரம் தெற்கு மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் குறித்த அறிவிப்பை திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
 
விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளராக பணியாற்றி வரும் செய்தி கே மஸ்தான் அவர்களை பொறுப்பிலிருந்து விடுவித்து அவருக்கு பதிலாக சேகர் அவர்கள் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். 
 
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
 
அதேபோல் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழகச் செயலாளராக பணியாற்றி வந்த புகழேந்தி அவர்கள் மறைவெய்திய காரணத்தால் கழக பணிகள் செவ்வனே நடைபெற டாக்டர் கௌதம் சிகாமணி அவர்கள் விழுப்புரம் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார்.
 
ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran