1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 8 மார்ச் 2022 (15:44 IST)

அவங்க நல்ல டீச்சரு.. ஏன் ட்ரான்ஸ்பர் பண்ணீங்க! – பேருந்தை மறித்த பொதுமக்கள்!

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே ஆசிரியை ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் நடத்திய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மூவராயன்பாளையம் மேலூரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கிட்டத்தட்ட 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியில் நன்றாக பாடம் நடத்திய ஒரு ஆசிரியைக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த ஆசிரியையை திரும்ப இந்த பள்ளிக்கே மாற்ற வேண்டும் என்றும், புதிதாக சில ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மனு அளித்திருந்துள்ளனர்.

ஆனால் மனு மீது எந்த நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் இன்று மூவராயன்பாளையத்தை சேர்ந்த மக்கள் பலர் கடைவீதி அருகே திரண்டு போராட்டம் நடத்தியதோடு, மண்ணச்சநல்லூர் வழியாக வேறு கிராமங்களுக்கு சென்ற பேருந்துகளை வழிமறித்து போராட்டம் நடத்தியுள்ளனர். பின்னர் அங்கு வந்த போலீஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் பெயரில் பொதுமக்கள் திரும்ப சென்றுள்ளனர்.