1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 7 மார்ச் 2022 (08:03 IST)

கனமழை எதிரொலி: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் கனமழை காரணமாக இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
 
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தேரோட்ட திருவிழா காரணமாக அம்மாவட்டத்திற்கு மட்டும் இன்று உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது