1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Village people protest in highway

கிணற்றில் தண்ணீர் எடுக்க மறுப்பு.. தொடரும் தீண்டாமை கொடுமை

நாமக்கல்
நாமக்கலில் பொது கிணற்றை மீட்டுத் தர கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காலங்கள் மாறினாலும் இந்தியாவில் தீண்டாமை என்னும் கொடுமை இன்னும் பல கிராமங்களில் அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் பொட்டணம்புதூரில் அருந்ததியர் மக்கள் பயன்படுத்தி வந்த பொது கிணற்றை 2012 ஆம் ஆண்டு வேறு சமூகத்தினர் ஆக்கிரமித்து வேலி போட்டுள்ளனர். இதனால் அருந்ததியர் மக்கள் அக்கிணற்றில் தண்ணீர் எடுக்க முடியவில்லை.

மேலும் கோவிலுக்கு கும்பம் அழைக்கும் நிகழ்ச்சிக்கு அருந்ததியர் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதால் 7 ஆண்டுகளாக விழா நடத்தாமலும் உள்ளனர். இது குறித்து நாமக்கல் கோட்டாட்சியரிடம்5 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும் உடன்பாடு ஏற்படாத நிலையில் அப்பகுதி மக்கள் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீஸார் கைது செய்தனர்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
வாட்ஸ் ஆப்பில் டிரிபிள் டிக் வந்தால் உங்களுக்கு ஆப்புதான்..