செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (12:13 IST)

ஓ.பி.எஸ்ஸா? ஈ.பி.எஸ்ஸா? - அவரே கன்பியூஸ் ஆகிட்டாரு

முதலமைசர் மற்றும் துணை முதலமைச்சர் பெயரை மாற்றி தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசியது கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.

 
கரூரை சேர்ந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் தற்போது தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருக்கிறார். இவருக்கும், அதே கரூரை சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் மற்றும் தற்போதைய அரவக்குறிச்சி எம்.எல்.ஏவுமான தினகரன் அணி செந்தில் பாலாஜிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்.
 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியையும், அமைச்சர் விஜயபாஸ்கரின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். 
 
இந்நிலையில், செய்தியாளர் சந்திப்பை நடத்திய விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்தார். அப்போது, செந்தில் பாலாஜியின் ஆட்சியிலே எனக்கூறி தடுமாறினார். மேலும், முதலமைச்சர் ஒ.பி.எஸ் எனக் கூறி அதன் பின்பு சமாளித்தார்.
 
இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.