புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 3 நவம்பர் 2024 (07:25 IST)

புதிய டிவி சேனல் தொடங்குகிறார் விஜய்.. 24 மணி நேரமும் கட்சி செய்திகள்..!

Vijay
நடிகர் விஜய் புதிய டிவி சேனலை தொடங்க இருப்பதாகவும் அதில் தமிழக வெற்றி கழகத்தின் செய்திகள் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும் கூறப்படுகிறது.
 
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய விஜய், கடந்த மாதம் 27ஆம் தேதி மாபெரும் மாநாட்டை நடத்தினார் என்பதும், இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர் என்பதும் தெரிந்தது.

மேலும், இந்த மாநாட்டில் விஜய் பேசியது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த கட்டமாக அவர் வரும் டிசம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை நேரடியாக சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தை பலப்படுத்தும் நோக்கத்தில் புதிய டிவி சேனலை விஜய் தொடங்க இருப்பதாகவும், தமிழ் ஒலி என அந்த டிவி சேனலுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கட்சியின் நிர்வாகிகள் இடம் விஜய் ஆலோசனை செய்திருப்பதாகவும், புதிய டிவி சேனல் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva