1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (13:07 IST)

விஜய் தன் மகனை பொளந்ததை போல.. சீமான் விஜய்யை பொளக்கிறார்! - சாட்டை துரைமுருகன் விளக்கம்!

Seeman Vijay

தவெக தலைவர் விஜய் குறித்த சீமான் விமர்சனங்கள் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில் அதுகுறித்து நாம் தமிழர் கொ.ப.செ சாட்டை துரைமுருகன் பேசியுள்ளார்.

 

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் சமீபத்தில் விக்கிரவாண்டியில் கட்சி மாநாட்டை நடத்தி தனது கொள்கைகளை விளக்கினார். இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யை கடுமையாக விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

விஜய்யின் அரசியல் வருகைக்காக தொடர்ந்து ஆதரவு அளித்த சீமான் இப்போது இப்படி கடுமையாக விமர்சிக்க காரணம் என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

இந்நிலையில் சீமானின் விமர்சனம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் “தான் ஆசையாய் வளர்த்த பிள்ளை காணாமல் போகிறது அதனால் குடும்பத்திற்குள் குழப்பம் வருகிறது 20 ஆண்டுகள் கழித்து காணாமல் போன மகன் கிடைக்கிறான் மகிழ்ச்சியில் குடும்பமே கொண்டாடுகிறது 
 

 

ஆனால் வந்தவன் ஆளே மாறி வந்திருக்கிறான் என்பது போகப் போகப் தெரிகிறது அவனை இயக்குகிறவன் தவறான கதைகளை சொல்லி தன் குடும்பத்திற்கு எதிராகவே அவனை வளர்த்துள்ளான் என்பது அப்பாவிற்கு தெரியவர அப்பா அவனை போட்டுத் தள்ளுகிறார் !

 

நடிகர் விஜய்யின் GoAt படத்தில் தன் மகனை தவறானவன் என தெரிந்தவுடன் விஜய் எப்படி பொளந்தாரோ அப்படித்தான் நிஜத்தில் தம்பியாக நினைத்தவர் தவறான அரசியலை கையிலெடுத்தவுடன் அண்ணன் சீமானும் பொளக்கிறார் ! That’s all bro !” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K