வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 நவம்பர் 2024 (12:04 IST)

சீமானை கண்டுக்க வேணாம்.. நமது அரசியல் எதிரி யார்னு விஜய் சொல்லியிருக்கார்! - தவெக நிர்வாகி!

Seeman Vijay

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை சீமான் விமர்சித்து பேசியிருந்த நிலையில் அதுகுறிது த.வெ.க நிர்வாகி வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜய், கடந்த வாரத்தில் விக்கிரவாண்டியில் பல லட்சம் பேர் சூழ வெற்றிகரமாக மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். இந்நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்தும், கொள்கை குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு கூட்டத்தில் விமர்சித்து பேசியிருந்தார்.

 

சீமானின் விமர்சனம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக வெற்றிக் கழக நிர்வாகி சம்பத்குமார் என்பவர் ”சீமான் முன் வைத்த விமர்சனங்களால் தவெக தொண்டர்கள் அவரையும் இனி மற்ற அரசியல்வாதிகளில் ஒருவராக கருதி விலகிச் செல்வார்கள். தவெக மாநாடு நடப்பதற்கு முன்பு சீமான் பேசியதும், மாநாடு வெற்றிக்கு பின் சீமான் பேசுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு தெரிகிறது.

 

தவெக நிர்வாகிகளுக்கு பல வேலைகள் உள்ள நிலையில் சீமானை போன்று பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் எங்கள் பயணத்தின் வேகம் தடைப்படும். எங்கள் அரசியல் எதிரி யார் என முடிவு செய்து விட்டு களமாடி வருவதால் யாரை விமர்சனம் செய்ய வேண்டும். யாரை கடந்து போக வேண்டும் என எங்களுக்கு விஜய் உணர்த்தியுள்ளார்” என தெரிவித்துள்ளார்.

 

Edit by Prasanth.K