1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayakumar says he registered for organ donation

நானும் ஜெயக்குமாரும் உடலுறுப்புத் தானம் செய்துள்ளோம் –விஜயபாஸ்கர் அறிவிப்பு !

விஜயபாஸ்கர்
உடலுறுப்புத்தானம் சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர் உடலுறுப்புத்தானம் செய்ய பதிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.

உடலுறுப்புத் தின விழிப்புணர்வு முகாமை நேற்று அமைச்சர் ஜெயக்குமாரும் அமைச்சர் விஜயபாஸ்கரும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கலந்துகொண்டனர். அப்போது உடலுறுப்புத்தானம் வழங்கிய 5 கொடையாளிகளின் குடும்பங்களுக்கு நினைவுப்பரிசை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ‘ நானும் அமைச்சர் ஜெயக்குமாரும் உடலுறுப்புத்தானம் செய்ய பதிவு செய்துள்ளோம். அனைவரும் உடலுறுப்புத்தானம் செய்ய முன்வரவேண்டும். தமிழகம் உடலுறுப்பு தானத்தில் சிறந்து விளங்குகிறது. அதற்காக மத்திய அரசு விருது வழங்கியுள்ளது.’ எனத் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
ஒரு பாதிரியாரா இருந்துட்டு இப்படி பண்ணலாமா?....கேரளாவில் நடந்த கொடுமை