புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2019 (09:22 IST)

பாமகவுக்கு சீட் உண்டு… அதிமுக ஒரு ஜெண்டில்மேன் – அமைச்சர் ஜெயக்குமார் பதில் !

மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில் பாமகவுக்கு ஒப்பந்தப்படி சீட் வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூலை 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. சட்டமன்றத்தில் உள்ள தற்போதுள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தின்படி, திமுகவுக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களை பெறும் தகுதி உள்ளது. தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்கியுள்ள நிலையில் திமுக தங்கள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நேற்று திமுக தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள வேலையில் அதிமுக எப்போது அறிவிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேப்போல மக்களவைத் தேர்தலின் போது போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி பாமகவுக்கு சீட் வழங்குமா என்ற சந்தேகங்கள் எழுந்தன. இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பியபோது ‘ஒருங்கிணைப்பாளரும் இணை ஒருங்கிணைப்பாளரும் இதுபற்றி ஏற்கனவே கூறியுள்ளனர். ஒப்பந்தத்தில் உள்ளதை நிறைவேற்றுவதே மரபு. அதிமுக ஒரு ஜெண்டில் மேன் ’ எனத் தெரிவித்துள்ளார்.