புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 7 மார்ச் 2019 (20:21 IST)

விஜயகாந்தை நம்பி ஏமாந்தேன் - தேமுதிக நிர்வாகி ராஜினாமா

கடந்த இரண்டு நாட்களாகவே தேமுதிக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது . இந்நிலையில் ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளுடன் கூட்டணி பேச்சு நடத்தியது பிடிக்காமல் அக்கட்சியின் முக்கிய நிர்வாகி விஜய் பவுல்ராஜா ராஜினாமா செய்துள்ளதால் அக்கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்த விஜய் பவுல்ராஜா விஜயகாந்த்துக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
 
அதில், திரைப்படத்தில் நடித்த உங்களை நம்பி ஏமாந்து வந்த ரசிகர்களில் நானும் ஒருவன். 1999 ல் ரசிகர்  மன்றம் தொடங்கி தற்போது வரை உங்களுடன் பயணித்ததற்கு நான்  வெட்கப்படுகிறேன். இவ்வாறு   எழுதப்படுள்ள இக்கடிதத்தில் இனியும் உங்களின் நடிப்பை நம்பி எமாற தயாராக இல்லை. அதனால் தேமுதிகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனாள் தேமுதிகவில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிகிறது.