திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 மார்ச் 2019 (14:11 IST)

திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? தேமுதிக சுதீஷ் திடீர் பேட்டி!

நேற்று தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயலிடம் அதிமுக கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருந்த அதே நேரத்தில் தேமுதிக முக்கிய நிர்வாகிகள் திமுக பொருளாளர் துரைமுருகனை சந்தித்து பேசினர்.  
 
இதுகுறித்து துரைமுருகனிடம் கேட்ட போது, சுதீஷ் திமுகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாக தெரிவித்தாக குறிப்பிட்டார். மேலும், ஸ்டாலின் தற்போது ஊரில் இல்லை எனவும் தேமுதிகவிற்கு கொடுக்கும் அளவுக்கு எங்களிடம் சீட் இல்லை என தேமுதிகவிடம் கூறிவிட்டதாகவும் சொன்னார்.  
 
துரைமுருகனிடம் பேசியதை நேற்று ஒப்புக்கொண்டார் சுதீஷ். இதனால் ஒரே நாளில் இரண்டு கட்சிகளோடும் தேமுதிக கூட்டணி பேரம் நடத்தியது முறையல்ல, இது அரசியல் நாகரீகமும் அல்ல, தேமுதிக மட்டமான அரசியலில் ஈடுப்பட்டு வருகிறது என விமரசங்கல் முன்வந்தது. 
இந்நிலையில், இன்று காலை முதல் தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் விஜயகாந்த் தலைமையில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் சுதீஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு, 
 
நேற்று எங்கள் கட்சி முக்கிய நிர்வாகிகள் திரைமுருகனை தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளனர். அரசியல் நோக்கத்துடன் அந்த சந்திப்பு நடைபெறவில்லை. அதேபோல், நான் துரைமுருகனிடம் பேசியது உண்மைதான். ஆனால், நான் நேற்று பேசினேன் என கூறப்படுவது உண்மையில்லை, ஊடங்களே அவ்வாறு சித்தரித்து உள்ளது. 
நாங்கள் கூட்டணி தொடர்பான நிலைபாட்டில் தெளிவாக உள்ளோம். எங்கள் கூட்டணி பாஜகவுடன் என்பதை முன்னரே முடிவு செய்துவிட்டோம். ஆனால், பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்க முடிவு செய்தது. அதற்கு நாங்கள் தயாராகவும் இருந்தோம். 
 
ஆனால், பாமக உடன் கூட்டணியில் அதிமுக கையெழுத்திட்ட போதே எங்கள் கூட்டணியையும் உறுதி செய்யவில்லை என்பதே வருத்தம். இருப்பினும் எங்கள் கூட்டணி அதிமுகவுடன்தான். இன்னும் 2 நாட்களில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு எந்தனை தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடுவோம் என தெரிவித்தார்.