செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2021 (12:09 IST)

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் அதை செய்வார்… பிரேமலதா விஜயகாந்த் தகவல்!

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்திற்கு தயாராகி வருகின்றன. ஆனால் தேமுதிகவும் அதன் தலைவர் விஜயகாந்தும் கிணற்றில் போட்ட கல் போல தமிழக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் உள்ளன.  தேமுதிகவின் இந்த வீழ்ச்சிக்கு விஜயகாந்தின் உடல்நிலை நலிவடைந்ததே காரணம். அதன் பின்னர் கட்சி பொறுப்பை ஏற்ற பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் ஆகியோரால் கட்சியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல முடியவில்லை.

இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ‘தேர்தல் தேதி அறிவித்த பின்னர் விஜயகாந்த் பிரச்சாரத்துக்கு வருவார்’ எனக் கூறியுள்ளார்.