சென்னைக்கு திரும்பும் விஜயகாந்த்: குதூகலத்தில் தேமுதிக தொண்டர்கள்

vijayakanth
Last Modified வியாழன், 14 பிப்ரவரி 2019 (08:38 IST)
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து  நாளை மறுநாள் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக் குறைவுக் காரணமாக அவதிப்பட்டு வருகிறார். தைராய்டு மற்றும் சிறுநீரகக் கோளாறு ஆகியப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு இருக்கும் கடந்த சிங்கப்பூர் சென்று சிகிச்சைப் பெற்று வந்தார்.
 
இதனையடுத்து மனைவி பிரேமலதாவுடன் கடந்த டிசம்பர் 18ஆம் தேதி மேல்சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கேப்டனின் உடல்நலக்குறைவால் அவரது தொண்டர்களும் ரசிகர்களும் மனமுடைந்தனர். அவர்களை உற்சாகப்படுத்த அமெரிக்காவில் இருந்து அவ்வப்போது கேப்டன் தன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தார்.
 
இந்நிலையில் சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நாளை மறுதினம்(பிப்ரவரி 16ந் தேதி) சென்னைக்கு திரும்புகிறார் என தேமுதிக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க தேமுதிக தொண்டர்களும் கட்சியினரும் ஆயத்தமாகி வருகின்றனர். கேப்டன் வந்ததும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :