1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 5 ஆகஸ்ட் 2018 (17:47 IST)

அமெரிக்காவில் விஜயகாந்த்: வைரலாகும் புகைப்படங்கள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளதை அடுத்து அவர் குடும்பத்தினர்களுடன் அமெரிக்காவின் முக்கிய இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 
அமெரிக்காவின் முக்கிய இடங்களில் விஜய்காந்த், அவருடைய மனைவி பிரேமலதா மற்றும் மகன் சண்முகப்பாண்டியன் ஆகியோர் இருக்கும் புகைப்படங்களை சற்றுமுன் விஜயகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை விஜயகாந்த் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் அதிகளவில் ஷேர் செய்து வருவதால் இணையதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.
 
இந்த புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது விஜயகாந்த் உடல்நிலை நன்கு தேறியிருப்பது தெரிகிறது. எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் புத்துணர்ச்சியுடன் விஜயகாந்த் களத்தில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.