தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை ! தேமுதிக தொண்டர்கள் வரவேற்பு ...
தமிழகத்தில் இரு ஆளுமைகளாக முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இருந்த போது அரசியல் களம் கண்டவர் விஜயகாந்த். படங்களில் சூப்பர் ஸ்டாராக மக்கள் மனதில் நிரம்ப இடம்பிடித்த காலத்திலிருந்தே அற்புதமான மனிதர் என்ற பெயரை எடுத்தவர் விஜயகாந்த். தற்போது உடல் நிலை சரியில்லாததால் ஓய்வு எடுத்து வரும் நிலையில் ஏரி குளங்களை தூர்வார வேண்டி தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
கருணாநிதி,எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய சினிமா கலைஞர்களுக்கு அடுத்து அரசியல் காலூன்றியவர்களை நம் தமிழர்கள் அரசியல்வாதிகளாக ஏற்கவில்லை. ஆனால் விஜயகாந்த் என்ற் நடிகரை மக்கள் நாயகனாக ஏற்றுக்கொண்டு அமோக ஆரதவளித்து தமிழகத்தில் மூன்றாவது திராவிட கட்சியாக்கினர். சில வருடத்திலேயே எதிர்கட்சி தலைவர் என்ற தகுதியை பெற்றார்.
விஜய்காந்த் உடல்நலத்துடன் மேடைகளில் கர்ஜித்துக்கொண்டிருந்தவரை அவரது அன்புக்கட்டளைக்கு மக்கள், தொண்டர்கள் கட்டுண்டு இருந்தனர்.அவருக்கு உடல் நிலை குன்றத்தொடங்கியது முதல் கட்சியின் பொருளாளரான விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் தன் கையில் அதிகாரத்தை எடுத்தார். போதாக்குறைக்கு அவர்களது மகன்கள் மேடைகளில் தாறுமாறாக முழங்கி கட்சியின் செல்வாக்கை சரித்தனர். இதுமட்டுமா நிருபர்களை ஒருமையில் பேசிய சர்ச்சையிலும் பிரேமலதா சிக்கிக்கொண்டார்.
இந்நிலையில் கடந்த மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து ஒரு இடத்தில் கூட தேமுதிக வெற்றிபெறவில்லை. இந்நிலையில் கட்சியை அடையாளப்படுத்தும் வேலைகளில் கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர். அதிலும் சில தொண்டர்கள் வேறு கட்சிக்கு மாறி வருகின்றனர். தற்போது தொண்டர்களாக தேமுதிகவில் இருப்பவர்கள் விஜயகாந்தின் ரசிகர்கள் என்று தெரிகிறது.
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜயகாந்தின் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடுவது வழக்கம். எனவே இந்த முறையும் சிறப்பாகக் கொண்டாடும் படி, அனைத்து மாவட்ட செயலர்களுக்கு பிரேமலதா உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலில் செலவழித்தது போக தற்போது இதையும் அவர்கள் ஒரு சுமையாகவே கருதுவதாகத் தகவல்கள் வெளியாகின்றது
இந்நிலையில் ஏரி குளங்களை தூர்வார வேண்டி தமிழக அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். தேமுதிக பொதுசெயலாளர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்கள் குப்பை கூளங்களாக உள்ளது. எனவே அரசு உடனடியாக கவனம் செலுத்தி இந்தக் குப்பைகளை அகற்றும் பணியை தீவிரமாக செயல்படுத்த வேண்டும். மேலும் மழைக்காலம் தொடங்கியுள்ள இந்த நேரத்தில் தமிழக அரசு உடனடியாக நீர்நிலைகளை தூர்வார அதிக கவனம் செலுத்தி மழை நீரை சேமிக்க அக்கறை காட்ட சேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் இக்கடிதத்தை தேமுதிக தொண்டர்களும் வரவேற்றுள்ளதாகத் தெரிகிறது.