புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 ஜூலை 2019 (09:31 IST)

உதவி செய்ததற்கு காசு கேட்டும் விமானப்படை: தள்ளுபடி கோரும் கேரளா!

கேரள வெள்ளத்தின் போது உதவியதற்கு இந்திய விமானப்படை ரூ.113 கோடி தரும்படி கேரள அரசை கேட்டுள்ளது. 
 
கடந்த ஆண்டு கேரளாவில் வெள்ளம் வந்த போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை செயல்பட்டது. ஆனால், இப்போது மீட்பு பணியில் உதவியதற்காக குறிப்பிட்ட தொகையை அளிக்கும்படி கேட்டுள்ளது. 
 
இதனால், கேரள முதல்வர் பினராயி விஜயன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு விமானப்படை கோரும் தொகையை தள்ளுபடி செய்யுமாறு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 
 
2017 ஆம் ஆண்டு ஒக்கி புயல் மற்றும் 2018 ஆம் ஆண்டு வெள்ளப் பெருக்கினால் கேரளா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகளுக்காக ரூ.31 ஆயிரம் கோடி மத்திய அரசிடம் கேட்கப்பட்டது. ஆனால், ரூ.2 ஆயிரத்து 900 கோடி மட்டுமே வந்துள்ளது. 
 
எனவே மீட்புப் பணிக்காக விமானப்படை கேட்டுள்ள ரூ.113 கோடி  தள்ளுபடி செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.