ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (15:03 IST)

தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இது தலைக்குனிவு: விஜயகாந்த்

நேற்று நடந்த பிளஸ் டூ பொது தேர்வில் தமிழ் பாடத்தை 50,000 மாணவர்கள் எழுதவில்லை என்பது தமிழை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய தலைகுனிவு என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 
 
நேற்று பிளஸ் டூ தேர்வுகள் தொடங்கிய நிலையில் 50 ஆயிரத்துக்கு அதிகமான மாணவர்கள் தமிழ் முதல் தாள் தேர்வு எழுதவில்லை. இந்த தகவலை பள்ளி கல்வித்துறை தெரிவித்து நிலையில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. 
 
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:
 
 தமிழ் தேர்வை ஐம்பதாயிரம் மாணவர்கள் எழுதாதது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் பொது தேர்வை மாணவர்கள் புறக்கணித்ததற்கு பள்ளிக்கல்வித்துறை பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை வைத்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இது ஒரு தலைப்பு உணவு என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் தமிழகத்தில் 12ம் வகுப்பு  மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் 3 வரை, 11ம் வகுப்புக்கு மார்ச் 14 - ஏப்ரல் மாதம் 5 வரையிலும்,10ம் வகுப்புக்கு  ஏப்ரல் 6 - 20 வரையிலும் தேர்வு நடைபெற உள்ளது.பொதுத்தேர்வு எழுத இருக்கும் மாணவ செல்வங்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran