வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 14 மார்ச் 2023 (14:30 IST)

நடிகர் விஜய்க்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்....'லியோ' ஷூட்டிங் புகைப்படம் வைரல்

vijay- lokesh kanakaraj
தமிழ்சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவரது பிறந்த நாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகள் கூறி வரும் நிலையில், அவர் நடிகர் விஜய்க்கு நன்றி கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், கடந்த 2017 ஆம் ஆண்டு  'மாநகரம்' என்ற படத்தை இயக்கினார். இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்களின் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. 

இதையடுத்து, நடிகர் கார்த்தி நடிப்பில் 'கைதி' என்ற படத்தை இயக்கினார். இப்படமும் சூப்பர் ஹிட்டானது.

இப்படத்தை அடுத்து, நடிகர் விஜய்யுடன் இணைந்து 'மாஸ்டர்' படத்தை இயக்கினார். இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வசூலில் சாதனை படைத்து, அவரை முன்னணி இயக்குனராக உயர்த்தியது.

இதையடுத்து, நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கிய 'விக்ரம்' படம் உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்கு மேல் வசூலீட்டியது.

இதையத்து, அவர் இயக்கிவரும் விஜய்யின் 67 வது படமான 'லியோ' பட ஷூட்டிங் தற்போது, காஷ்மீரில் நடந்து வருகிறது. பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று லோகேஷ் கனகராஜின் பிறந்த நாளையொட்டி அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ‘’ நன்றி கூறுதல் மட்டும் போதாது. இருப்பினும் எனக்கு வாழ்த்துகள் கூறியும் வீடியோக்கள் வெளியிட்டு வரும் ரசிகர்களுக்கு ஒரு பில்லியன் நன்றிகள். இது எனக்கு மேலும் பொறுப்புணர்வை கூட்டி மக்களை மகிழ்விப்பதில் என் இதயத்தையும் ஆன்மாவையும் செலுத்துவேன். அனைவருக்கும் நன்றி.. மிக்க அன்பு ‘’என்று பதிவிட்ட்டுள்ளார். மேலும், மற்றொரு டுவீட்டில், தற்போது நடந்து வரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு, ‘’எல்லாவற்றிற்கும் விஜய் அண்ணா    நன்றி’’  என்று பதிவிட்டுள்ளார்.