செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 7 நவம்பர் 2021 (15:42 IST)

காதல் விவகாரம்…. 17 வயது சிறுவன் அடித்துக் கொலை!

வேலூர் அருகே காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு ஓடிய மைனர் காதலர்களை வீட்டுக்கு அழைத்து வந்து தாக்கியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் சாய்நாத்புரம் பகுதியைச் சேர்ந்த சாய்நாத் என்ற 17 வயது மைனர் இளைஞர், அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியைக் காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் சில தினங்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர். அவர்களைத் தேடிக் கண்டுபிடித்த சிறுமியின் பெற்றோர் அவர்களின் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

வீட்டில் வைத்து மரத்தில் கட்டி அந்த சிறுவனைத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவரை மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டதாக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் மருத்துவர்கள் சந்தேகமடைந்து போலிஸாருக்கு தகவல் சொல்லவே அவர்கள் வந்து விசாரித்ததும் உண்மை தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமியின் தந்தை ராஜ்குமார் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோகுல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.