முதல்வர் குணமாக பிராத்திக்கிறேன்… விஜயகாந்த் அறிக்கை!

Last Updated: செவ்வாய், 20 ஏப்ரல் 2021 (18:38 IST)

குடலிறக்க பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடு திரும்பியுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடலிறக்க பிரச்சனைக்காக சென்னையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சைக்குப் பின் இன்று அவர் வீட்டுக்கு திரும்பினார். இதையடுத்து அவர் உடல்நலம் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் ட்வீட் செய்துள்ளார்.

அதில் ‘சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குடலிறக்க அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், அவர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப இறைவனை பிரார்த்திக்கிறேன்‍’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :