டெல்லி சென்ற விஜயதாரணி .. இன்று பாஜகவில் இணைகிறாரா?
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதாரணி இன்று டெல்லியில் இருப்பதாகவும் அவர் இன்று பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
விளவங்கோடு தொகுதி விஜயதாரணி கன்னியாகுமரி தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டதாகவும் ஆனால் காங்கிரஸ் தலைமை மறுத்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
இதனை அடுத்து விஜயதாரணி பாஜகவில் இணைய இருப்பதாகவும் பாஜக சார்பில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் செல்வபெருந்தகை காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு விஜயதாரணியை அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அதன் பின் விஜயதாரணி கட்சி மாறவில்லை என்று கூறியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலையும் படி விஜயதாரணி டெல்லி சென்று இருப்பதாகவும் அவர் இன்று டெல்லி பாஜக தலைமையகத்தில் பாஜகவில் இணைய இருப்பதாகவும் இது குறித்த நிகழ்ச்சி இன்னும் சில மணி நேரத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Edited by Mahendran