ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 24 பிப்ரவரி 2024 (09:12 IST)

காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடையாது, 42லும் தனித்து போட்டி: மம்தா பானர்ஜி அதிரடி..!

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சுமூகமாக தொகுதியுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகிய நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தங்கள் கட்சி போட்டியிட போவதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .  
 
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டதாகவும் காங்கிரஸ் கட்சிக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியது.  
 
ஆனால் தற்போது வந்துள்ள தகவல் படி மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி தனித்து போட்டி என்றும் காங்கிரஸ் உடன் தொகுதி உடன்பாடு இல்லை என்றும் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார் .
 
மம்தா பானர்ஜியின் இந்த அதிரடி அறிவிப்பை அடுத்து காங்கிரஸ் என்ன செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் சோனியா காந்தி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி காங்கிரஸ் கட்சிக்கு ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது திடீர் திருப்பமாக மம்தா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Mahendran