திங்கள், 18 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (19:56 IST)

அரசு மத விவகாரத்தில் நடு நிலையோடு செயல்பட வேண்டும்- முன்னாள் நீதிபதி

KM Joseph
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளது.
 
இந்த நிலையில், அரசு மத விவகாரத்தில் நடு நிலைமையோடு செயல்பட வேண்டும் என் முன்னாள் உச்ச நீதிமன்ற  நீதிபதி கே.எம்.ஜோசப் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
ஓரு அரசு அல்லது அரசியல் தலைவர் ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த  நிலைப்பாட்டை எடுத்தால் அங்கு மதச்சார்பின்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
 
அரசியலமைப்பின் அடிப்படை கோட்பாடே மதச்சார்பின்மைதான். இந்திய அரசியலமைப்பின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மையை நீக்கினால் , அது ஜனநாயகத்துக்கே பேரழிவு...மதம் என்பது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம். அரசு மத விவகாரத்தில் நடு நிலையோடு செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.