1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vijayabaskar daughter campaigning for herself

அமைச்சர் விஜயபாஸ்கருக்காக வாக்கு சேகரித்த அவரின் குட்டி மகள்!

விஜயபாஸ்கர்
அமைச்சர் விஜய்பாஸ்கருக்காக அவரின் மகள் வாக்கு சேகரித்து பேசும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றைய தேர்தல் பிரச்சார மேடையில் பேசும்போது ’எனக்கு சுகர் இருக்கிறது, எனக்கு பிரஷர் இருக்கிறது, உடம்பில் கோளாறு இருக்கிறது, மாத்திரையை போட்டுக் கொண்டுதான் பணி செய்து கொண்டிருக்கிறேன். ஆனால் உடம்பில் வெறி இருக்கிறது. இயேசுநாதர் சிலுவையைச் சுமந்து போல இந்த விராலிமலை தொகுதியை சுமக்கின்றேன்’ என்று உருக்கமாகப் பேசினார். விஜயபாஸ்கரின் இந்த பேச்சு அனுதாபத்தின் மூலம் ஓட்டுகளை பெற முயற்சி செய்வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அதன் அடுத்த கட்டமாக இப்போது விஜயபாஸ்கர் தனது மகளை தேர்தல் பிரச்சாரங்களுக்கு அழைத்து வந்து பேச வைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த குழந்தையும் தன் அப்பாவைப் பற்றி நல்லவர் வல்லவர் என எழுதிக் கொடுத்ததை பேசி கூட்டத்தில் கைத்தட்டலை வாங்கி செல்கிறது.
அடுத்த கட்டுரையில்
இதுவரை 400 பேருக்கு மேல் பலி; கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மியான்மர் ராணுவத்துக்கு எதிர்ப்பு!