செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 28 மார்ச் 2021 (17:56 IST)

என் தாயை இப்படி பேசிவிட்டார்களே! பிரச்சாரத்தின்போது கண்கலங்கிய முதல்வர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது என் தாயை இப்படி பேசி விட்டார்களே என கண்கலங்கியது அனைவரையும் உருக்கியது 
 
சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஆ ராசா, எடப்பாடி பழனிச்சாமி குறித்தும் அவரது பிறப்பு குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கருத்தை தெரிவித்தார். இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பாக எடப்பாடி பகுதியில் உள்ள அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று திருவொற்றியூர் பகுதியில் அதிமுக கூட்டணிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் ’என் தாயை எப்படி எல்லாம் திமுகவின் ஆராசா பேசி இருக்கிறார் பாருங்கள் என சொல்லி கண்கலங்கினார்
 
முதலமைச்சரின் தாயையே திமுகவினர் இப்படி பேசுவார்கள் என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதனால் அவருடைய பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த பலரும் உருக்கமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது