1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (11:08 IST)

மனைவி ராதிகா வெற்றி பெற வேண்டி அங்கப் பிரதிஷ்டம் செய்த சரத்குமார்.. வேண்டுதல் பலிக்குமா?

sarathkumar-radhika
விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டி விருதுநகரில் உள்ள கோவிலில் சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம்  செய்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 
 
ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் ராதிகா சரத்குமார் பாஜக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்து தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் சார்பில் கௌசிக் ஆகியோர் போட்டியிட்டனர்.  இந்த நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் விருதுநகர் தொகுதியில் மனைவி ராதிகா சரத்குமார் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக விருதுநகரில் உள்ள கோவிலில் இன்று காலை சரத்குமார் அங்கப் பிரதிஷ்டம் செய்தார். அவருடன் ராதிகா உடன் இருந்தார் என்பதும் அதன் பின் இருவரும் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
சரத்குமாரின் வேண்டுதல் பலித்து நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் போது ராதிகா சரத்குமார் வெற்றி பெறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 
Edited by Mahendran