1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 16 மே 2024 (15:51 IST)

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறு பேச்சு.. நடிகை ராதிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார்..!

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தன்னை பற்றி அவதூறாக பேசியதாகவும் இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நடிகை ராதிகா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சமீபத்தில் காஞ்சிபுரத்தில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய போது ராதிகா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக தெரிகிறது. இதனை அடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா சரத்குமார் தரப்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது 
 
இந்த புகார் மனு போது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக ஆளுநர் மற்றும் பாஜகவின் குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு அதன் பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார் என்பதும் திமுகவிலிருந்து தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் அதன் பின்னர் மீண்டும் திமுகவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில் மீண்டும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா? திமுகவும் கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Mahendran