தொடர்புடைய செய்திகள்
- வரும் கல்வியாண்டு முதல் ஆன்லைனில் பொறியியல் கவுன்சிலிங்: அமைச்சர் தகவல்
- கோலாகலமாக நடைபெற்ற எஸ்.ஆர்.எம் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா
- தினகரன் சேவை நாட்டுக்கு தேவை - கட்சி மாறிய எம்.எல்.ஏ பேட்டி
- தினகரனை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ! இன்னொரு விக்கெட் போச்சா?
- டிவி நிகழ்ச்சி மூலம் பெண் தேடும் ஆர்யா; கலாய்த்த காமெடி நடிகர்
கரூர் அருகே அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை முற்றுகையிட்ட நெசவாளர்களால் பரபரப்பு
கரூர் அருகே உப்பிடமங்கலம் பகுதியில் கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களுக்கான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழக போக்குவரத்து துறை எம்.ஆர்.விஜயபாஸ்கர் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது ஊக்கத்தொகையை வழங்கும் போது, ஒரு சிலருக்கு மட்டுமே அதுவும் அ.தி.மு.க வினருக்கு மட்டுமே உதவித்தொகைகள் மட்டுமே கொடுக்கப்படுவதாகவும், குறிப்பிட்ட ரக நூல்கள் கைத்தறி நெசவு செய்ய வருவதில்லை என்று கூறியும், கைத்தறிக்கு வந்த நூல்கள் விசைத்தறிக்கு செல்வதாகவும், கூறியும், நெசவாளர்களுக்கு கூலி உயர்வு வேண்டியும் அமைச்சரை முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் காவல்துறையினரின் முன்னிலையிலேயே அமைச்சரை முற்றுகையிட்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சி.ஆனந்தகுமார்.கரூர்
அடுத்த கட்டுரையில்
