1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By

கோலாகலமாக நடைபெற்ற எஸ்.ஆர்.எம் பள்ளியின் முதலாம் ஆண்டு விழா

சென்னை கூடுவாஞ்சேரியில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம் பப்ளிக் ஸ்கூல் (SRM PUBLIC  SCHOOL) முதலாம் ஆண்டு விழா 17.02.2018 அன்று எஸ்.ஆர்.எம் (SRM) அறிவியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, டி.பி.கணேசன் கலையரங்கத்தில் நடைபெற்றது. 
காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுக்கு பள்ளியின் இயக்குனர் திருமதி. மணிமங்கை அவர்கள் தலைமையேற்க திருமதி. லட்சுமிபிரபா அவர்களால் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கப்பட்டது. இவ்விழாவில் பள்ளியின் முதல்வர் திருமதி. வசுமதிசீனிவாசன் அவர்கள் ஆண்டு அறிக்கையை சமர்பித்தார்.  மழலையர் பிரிவின் மாணவமாணவியர்கள் பங்குபெற்ற ஆடல் மற்றும் பாடல் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.
விழாவின் தொடர்ச்சியாக மாலை நிகழ்ச்சியில் SRM அறக்கட்டளை தலைவர் டாக்டர் பி. சத்தியநாராயணன் அவர்கள் தலைமை யேற்க டாக்டர் முருகன் IPS அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மாலையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் முதல் வகுப்பு முதல் ஏழாம் வகுப்பு வரை பயிலும் மாணவ  மாணவிகள் பங்கேற்றனர். ஆண்டு விழாவின் முக்கிய நிகழ்வாக கல்வி, விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் சிறந்த மாணவர்களுக்கான பரிசு மற்றும்  சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.